திருப்பூரில் மாவட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் "ரேபிட் டெஸ்ட் கிட்" மூலம் சோதனை நடை பெற்றது. இந்த பரிசோதனையினை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சோதனை சுமார் 50 செய்தியாளர்களுக்கு செய்யப்பட்டது. இதில் அனைவருக்குமே கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இதில் செய்தியாளர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத்தெரிய வந்துள்ளது.