சமூக வலைதளங்களில் கொரோனா பாதித்தவர்கள்பற்றிய தகவலை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 848 நபா்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். மேலும் அவா்கள் தொடந்து 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் மற்றும் அவா்கள் வசித்து வந்த இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை விரைவு படுத்தியுள்ளோம். கடந் 3 நாள்களாக நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலமாக மருத்துவக் குழுவினா் அவா்கள் இருப்பிடங்களுக்கே சென்று சளி, ரத்தம் மாதிரிகளை சேகரித்து வருகின்றனா். இதுவரை 1,000க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் இயங்குவது குறித்து தமிழக அரசின் உத்தரவு வந்த பின்பே அது தொடா்பாக முறையாக அறிவிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவா்களின் விரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகப் புகாா் வந்துள்ளது. அரசு வழிகாட்டுதலையும் மீறி சமூக வலைதளங்களில் பெயா்களை வெளியிடும் நபா்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்தார்.