திருப்பூர்; நடிகர் சிவகார்த்திகேயன் பஞ்ச் டயலாக்கை செயலில் காட்டிய திருப்பூர் கலெக்டர்!

நடிகர் சிவகார்த்திகேயன் Social Distancing பஞ்ச் டயலாக்...நன்றி கூறிய விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.


சமூக தூரத்தை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் இயக்குனர் பொன்ராமுக்கு இந்த பாராட்டு சேர வேண்டும் எனக்கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்.



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையினரும் மக்களிடையே தொடர்ந்து சமூக இடைவெளியை எப்படி கடைபிடிப்பது மற்றும் கொரோனவில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது உட்பட பல விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். 


இதனிடையில், திருபூர் மாவட்ட ஆட்சியர் (IAS) விஜயகார்த்திகேயன், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு கிருமிநாசினி மண்டலத்தை (சுரஙகப்பாதை) திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட்டில் அமைத்ததிலும், சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ( உணவு, இருப்பிடம்) கவனித்துக்கொள்வதிலும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். 





அவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் வரும் டயலாக்கை மேற்கோள்காட்டி "நன்றி" தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தில் வரும் ஒரு பஞ்ச் டயலாக் (உரையாடலை) பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பஞ்ச் டயலாக் இதுதான் "நீ யாரா வேணும்னா இரு.. எவனா வேணும்னா இரு...  ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தளளியே இரு" என்பதுதான். அதறகு திருபூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டிவிட்டருக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "சமூக தூரத்தை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்ன "வருத்தப்படாத வாலிபர் பொன்ராமுக்குசங்கம்" படத்தின் இயக்குனர்  இந்த பாராட்டு சேர வேண்டும் என்றம், அதற்கு முன்னர் தான் டிவீட்டில் "கிரேட் ப்ரோ கீப் கோயிங்" என்று ஆட்சியர் விஜயகார்த்திகேயனை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




 





Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image