கொரோனாவை விரட்ட ஊமத்தங்காய் வேப்பிலை தோரணம்.
திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் வராலம் தடுக்க ஊமத்தங்காய் வேப்பிலைகளை தோரணமாக தயார் செய்து வீடுகளில் கட்டியுள்ளனர். இதைபற்றி அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் முருகன், பாண்டி, கார்த்தி ஆகியோரிடம் விசாரித்த பொழுது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ளவர்கள் வெளியில் எங்கும் சொல்வது இல்லை. தினமும் கொரோனா பற்றிய செய்திகளை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பயந்து போய் உள்ளார்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க இது போல் செய்தோம். இயற்கையாகவே வேப்பிலை ஒரு கிருமிநாசினி பாதிப்பு இருக்காது என்பதால் பெரியவர்களின் பயத்தை போக்கவே இதை செய்தோம்.
இந்த நம்பிக்கையில் வீட்டில் உள்ளவர்களுக்கு பயத்தை போக்கி நம்பிக்கையை தந்துள்ளது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது இவ்வாறு தெரிவித்தனர்.