திருப்பூர் மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட 20 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா நோய்ப்பரவலில் தமிழகத்தில் 3 வது இடம் இருப்பதால் திருப்பூர் மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று காலை போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்ட போது, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கே.பி.என். காலனி பகுதிகளில் 20 பேர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அவர்களை பிடித்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் தொற்று நோய்ப்பரவல் தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.