உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட போடுர் பசவன்னா திருக்கோவிலில் மற்றும் தமிழகம் - கர்நாடக எல்லை பகுதியில் உள்ள தீர்த்தம் வனப்பகுதியில் 50 - க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு 5 கிலோ ஆரஞ்சு பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் மதிய உணவாக வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை புனித்குமார் அளித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத் குமார் மற்றும் தன்னார்வலர்கள் கலீல், ஹரிஸ் ஆகியோர் சென்று உணவாக பழங்களை வழங்கியுள்ளனர்.