பல்லடம்; ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன். மக்களை நெகிழ வைத்த எம்.எல்.ஏ.!!
 

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதை எனது பாக்கியமாக கருதுகிறேன். மக்களை நெகிழ வைத்த பல்லடம் எம்.எல்.ஏ !!. 

பல்லடம் பாரதிபுரத்தில் உணவு பொருட்கள் கேட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் புதன்கிழமை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி, பாரதிபுரத்தில்2 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.  அப்பகுதியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


அங்கு தினந்தோறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களுக்கு உதவி செய்ய நகராட்சி சார்பில் தன்னார்வலர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டு அவர்களும் மற்றும் போலீஸாரும் சேவை செய்து வருகின்றனர். சேவாபாரதி அமைப்பு சார்பில் நலிவடைந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகிறது.  


இந்த நிலையில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் ஏ.நடராஜன் பல்வேறு இடங்களில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார் என்பதை பத்திரிக்கை மற்றும் டிவியில் நாங்கள் தினந்தோறும் செய்தி பார்த்து அப்பகுதி மக்கள். அவர்களது பகுதிக்கும் நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., வர வேண்டும் என்றும், எங்கள் குறைகளை கேட்றிய வேண்டும். ஊரடங்கால் தங்களுக்கு வருமானம் இன்றி உணவு பொருட்கள் மற்றும் காஸ் சிலிண்டர் வாங்க கூட பணம் இல்லை. ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன், வட்டாட்சியர் சிவ சுப்பிரமணியம், காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோரிடம் முறையிட்டனர். இது பற்றி போலீஸ் டி.எஸ்.பி.முருகவேல் பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் ஏ.நடராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வருவதாக எம்.எல்.ஏ., தெரிவித்தார். அதனை ஏற்று மக்கள் நகராட்சி, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் பணியை பாராட்டி கலைந்துசென்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அதிகாரிகளுடன் வந்த எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் இப்பகுதி அரசால் தடை செய்யப்பட்ட பகுதி. அதனால் தான் நான் இங்கு வரவில்லை. என்றாலும், உங்களை பற்றி நான் தினந்தோறும் அரசு அதிகாரிகளிடம் விசாரித்து கொண்டுதான் வருகிறேன். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதை எனது பாக்கியமாக கருதி இக்களத்தில் உரிய பாதுகாப்புடன் பணியாற்றி வருகிறேன். என்னால் முடிந்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறேன் என்றார். அங்கிருந்தவர்கள் இங்குள்ள 

200 குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இதனை கேட்டறிந்த  எம்.எல்.ஏ. நாளை காலை அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் எனது சொந்த செலவில் வழங்குகிறேன் என்று உறுதி அளித்தார். அதனை ஏற்று மக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு