திருப்பூர்; கொரானா தடுப்புக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய தெற்கு எம்.எல்.ஏ.!!




கொரானா தொற்று சிகிசைக்காக அம்மா டிரஸ்ட் நடமாடும் மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனத்தை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் சேவைக்காக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.     

திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில்,அதன் நிறுவனரும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் பொதுமக்கள் சேவைக்காக இலவசமாக செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனத்தை, கொரானா தொற்று சிகிச்சைக்காக திருப்பூர் மாநகராட்சி வசம் ஒப்படைக்க கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அவற்றை அவர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில்  எம் எல் ஏ., சு.குணசேகரன், நகர் நல அலுவலர் டாக்டர்.பூபதி, முன்னாள் கவுன்சிலர் எம்.கண்ணப்பன், அம்மா டிரஸ்ட் செயலாளர் சையது அலி, பொருளாளர் பர்மாநுல்லா, இணை செயலாளர் கண்ணபிரான், தம்பி (எ) சண்முகசுந்தரம் ஆகியோர் உடந்தனர். உடனிருந்தனர்  

 

  -:சிருங்கேரி சாரதா பீடத்திற்கு                           எம்.எல்.ஏ.,நன்றி:-


    மேலும், ஊரடங்கு தடையினால் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சர்களுக்கும், தன்னலமில்லாமல் சேவை செய்து வரும் தூய்மை பணியார்களுக்கும், *சிருங்கேரி* சாரதா பீடத்தின் திருப்பூர் கிளையின் உதவியுடன், சென்னை ஓம் சேரிட்டி இந்தியா பவுண்டேஷன் மூலமாக நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் பகுதியில் 75 கோவில் அர்ச்சர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் 415 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.500 ஐ அவரவர் வங்கி கணக்கில் (ONLINE) செலுத்தப்பட்டது.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் செய்திருந்தார். இது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையாக சகஷம் அமைப்பிற்கும், பொதுமக்களுக்கு உணவினை வழங்கி வரும் சேவா பாரதிக்கும் தலா ரூ.25,000  சாரதா பீடம், திருப்பூர் கிளையின் சார்பாக ஆடிட்டர் ராமநாதன் வழங்கினார்..,






Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image