பல்லடம் அருகே வலையபாளையத்தில் 50 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 4லிட்டர் சாராயம் விற்பனை செய்த 3பேரை காமநாய்க்கன்பாளையம் போலீஸார் கடந்த
வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வலையபாளையத்தில் 50 லிட்டர் சாராய ஊரல் போலீஸாரல் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது. பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையம் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து காமநாய்க்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சாராய விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் (வயது 42), ஆறுச்சாமி மகன் ராமசாமி (வயது 32), சுப்பன் மகன் பாப்பான் (வயது 40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அப்பகுதியில் இருந்த 50 லிட்டர் சாராய ஊரலையும் கண்டுபிடித்து அழித்தனர்.
.