கொரானா தொற்று தடுப்பு கிருமி நாசினி தெளிப்பில் திருப்பூர், மங்கலம் ஊராட்சி இந்தியாவில் முதலிடம் பெற்றதைப்போன்று, அகில இந்திய அளவில் சீர்மிகு ஊராட்சியாக தேர்வு பெற சிிறப்பாக
பனியாற்றுவேன் என தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்திதெரிவித்துள்ளார்
திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சி கொரானா ஒழிப்பு கிருமி நாசினி தெளிப்பில் தேசிய அளவில் சிறப்பாக செய்யப்பட்டதற்கு மத்திய அரசு பாராட்டடியுள்ளது.இது குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் கொரானா தொற்று பரவிக்கொண்டு இருந்த நேரத்தில் மத்திய அரசு கொரானா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 16 பேர் கொரானாவினால் பாதிக்கப்பட்டு மங்கலம் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அந்தநாள் முதல்
கொரானா தொற்றில் இருந்து
மக்களை பாதுகாக்கும் வகையில்
மங்கலம் ஊராட்சியில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவும், முக கவசம், கையுறை போன்றவை வழங்கி லாரிகள் மூலமும் வீடு, வீடாக சென்றும், ஒவ்வொரு வீதிகளிலும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அதில் இருந்து ஒரு நபருக்கு கூட நோய் பரவாத வகையில் ஊராட்சியில் மக்களை பாதுகாத்து வந்ததின் பயனாக இன்றநோ ய் பரவல் இருந்தவர்களும் தற்போது பூரண குணம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இன்னும் நாம் ஒரு வார காலத்திற்கு மங்கலம் ஊராட்சி மக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடித்து நாம் கொரணானவை முழுமையாக விரடட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் "மை கவர்மெண்ட்" என்ற இணையதளத்தில் தேசிய அளவிலான கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தின் சிறந்த செயல்பாடு என்ற தலைப்பில் மங்கலம் உள்பட்ட 4 ஊராட்சிகளை பாராட்டியுள்ளது. இதை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளிப்படுத்தியுள்ளளார். இந்த செயல்பாடு மக்களுக்காக
உண்மையாக நாங்கள் உழைத்ததற்கு கிடைத்த பாராட்டாகும். இதற்காக மங்கலம் ஊராட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சார்பிலும் மத்திய அரசுக்கும், மாவடட ஆட்சியர் அவர்களுக்கும், எங்களுடன் இணைந்து பணியாற்றிய உதவி இயக்குனர் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தி.மு.க.,தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் க.செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரிலும், வரும் 5 ஆண்டுகளில் சிறப்பான பணிகளை செய்து இந்தியாவில் சிறந்த ஊராட்சியாக மத்திய அரசின் விருதினை பெறும் வகையிலும், கூப்பிட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் பணியாற்றுவேன்.
மேற்கண்டவாறு ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கூறினார். பேட்டியின்போது சபிதீன், முபாரக் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் அவர் கொரானா தொற்றின் காரணமாக மங்கலம் ஊராட்சியில் வாழ் மக்களுக்கும் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.