திருப்பூரில்,கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு
பாராட்டியுள்ளனர்.!
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ். அலகு -2 மாணவ, மாணவிகள், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வினை மேற்கொண்டனர். அனைவருக்கும் கிருமிநாசினியும் கை உறையும், முக கவசமும் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியினை வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் கணபதி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம், ராக்கியபாளையம் பிரிவு, மாநகராட்சி அருகில் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினரிடம் இணைந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. பல்லடம் ரோடு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அயராது விழிப்புணர்வினை ஏற்படுத்தும் அலகு -2 குழுவினரை மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் பாராட்டி, வாழ்த்தினார் மேலும் மாநகர நல அலுவலர் டாக்டர்.பூபதி, நகராட்சி உதவி ஆணையர்கள் கண்ணன், சுப்பிரமணியம் ஆகியோரும் பாராட்டினர்.