பல்லடம்; கோழி இறைச்சி, கோழி முட்டை விற்பனை அதிகரிப்பு! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம்.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளி்ப்பு பணியை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோழி இறைச்சி, கோழி முட்டை ஆகியவை சாப்பிட்டால் அதன் மூலம் கரோனா நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தால் அவற்றை மக்கள் தவிர்த்தனர். இது பற்றி தமிழக அரசு மற்றும் உணவு துறை நிபுணர்கள், சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் கோழி இறைச்சி, கோழி முட்டை சாப்பிட்டால் நோய் வராது. உடலில் நோயை எதிர்க்கும் சக்தியை தான் அளிக்கும் என்று விளக்கம் அளித்தனர். அந்த உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் பயனாக தமிழகத்தில் தற்போது கோழி இறைச்சி, முட்டை நுகர்வு அதிகரித்து அதன் விற்பனை விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தில் இருந்து கறிக்கோழிகள் மற்றும் முட்டைகள் உரிய பாதுகாப்புடன் வேன்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மிகவும் பாதிப்படைந்து இருந்த கோழிப்பண்ணை தொழில் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊரங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த ஒரு தனி மனிதனும் உணவின்றி பசியால் வாடக்கூடாது என்பதற்காக தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் இன்று தமிழகத்தில் யாரும் உணவு கிடைக்காமல் பசியுடன் உள்ளனர் என்ற நிலை இல்லை. அதே போல் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளும் தீவனம் இன்றி பசியுடன் இருக்கக்கூடாது அவற்றுக்கு தேவையான தீவனங்கள் கிடைக்க செய்வதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகத்தில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க செய்ய கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் மேற்பார்வையில் மண்டல இணை இயக்குநர்கள் தலைமையில் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளடங்கிய குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் அந்தந்த கிராமங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் பட்டியல்படி அவர்களிடம் தீவன நிலவரம் குறித்து தகவல் சேகரிப்பட்டது. அதில் 3 மாதங்களுக்கு கால்நடைகளுக்கு வழங்க போதுமான அளவு மக்காச்சோளதட்டு தீவனம் இருப்பில் இருப்பதாகவும், புண்ணாக்கு உள்ளிட்ட அடர் தீவனம் கிடைப்பதில் தான் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கால்நடை தீவனம் விற்பனைக் கடைகளை திறந்து வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனம் இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் ஒரு கால்நடையும் பாதிக்கக்கூடாது என்பதற்காக கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று கால்நடை உதவி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களை தேடி அரசின் நலத்திட்ட உதவிகள் என்ற நோக்கில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் இன்று வாயில்லா ஜீவன்களான கால்நடைகளை தேடி மருத்துவம் என்ற வகையில் கால்நடை பராமரிப்பு துறையினர் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றனர். மேலும் கால்நடைகளை மருந்தகத்திற்கு அழைத்து வரும் அதன் உரிமையாளர் மூலம் கரோனா நோய் தொற்று கால்நடை மருத்துவர்களுக்கு வராமல் தடுக்க முக கவசம், தொப்பி, உடல் கவச உடை, கையுரை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் கால்நடை துறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவம் வழக்கம் போல் மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் மூலம் கால்நடை மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிரானிகளுக்கு எப்போதும் போல் உணவு கிடைத்து விடும். அதே சமயம் தெருக்களில் திரியும் நாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை வரக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள், பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். அவர்களின் கருணை உள்ள சேவையை பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன. மேற்க்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார். 

பேட்டியின்போது, பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன், நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, சரளை விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020