திருப்பூர்; மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரானா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு மையம்!

திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லுரியில் அரசு மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய வகையில் பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் 2 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது., திருப்பூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கண்கானிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்கானிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  திருப்பூரில் 50 பேருக்கு மேல் சோதனை முடிவு வர வேண்டியதிலிருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்ட நிலையில்  இன்னும் சில பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது . இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுகள் வந்துவிடும் எனவும் தெரிவித்தார்..போட்டியின் போது மருத்துவக்கல்லூரிமருத்துவர் கள், 4வது மண்டல உதவி ஆணையாளர் கண்ணன், திருப்பூர் ஐ.எம்.ஏ. சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image