ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நாளை முதல் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவன விற்பனைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்கக் கூடாது. ஊரடங்கு முடியும்வரை அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்க அனுமதி வழங்கப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ஊரடங்கு முடியும்வரை அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்க அனுமதி