பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலத்தில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீரை காமாட்சிபுரி ஆதீனம், பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்தம்பலம் ஆதீனம் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடத்தி கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சித்தம்பலம் நவகிரக கோட்டை கோவை காமாட்சிபுரி ஆதீனம் மடாதிபதி மற்றும் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோரின் தலைமையில் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கணேசன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், பொறியாளர் சங்கர், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், உழவர் பணி கூட்டுறவு சங்கத்தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, சரளை ஆர்.விக்னேஷ், லிங்க குருசாமி, என்.எஸ்.கே.நகர் சரவணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்