திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி, பல்லடம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, தனது சொந்த நிதியிலிருந்து கொரானா தொற்று ஒழிப்பு பணிக்காக, பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர். கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் ரூ.30,000, வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்
நகராட்சி பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், உழவர் பணி கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, யவன கதிரவன், என்.எஸ்.கே.நகர் சரவணன், ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்
பல்லடம் சட்டமன்ற தொகுதி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகிகள் ஆகியோருக்கு பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜ் தனது சொந்த நிதியிலிருந்து அரிசி உள்ளிட்ட பொருள்களை
பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரனிடம் ஒப்படைத்து, அவர் மூலம் பணியாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாாள் ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.சிவாசலம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், மோகன்ராஜ், ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்