அவிநாசி அருகில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வெளியில் செல்லமுடியாமல் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் எம் .ஏ. அவர்களின் ஆலோசனைப் படியும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் .எஸ் .எம். ஆனந்தன் அவர்களின் ஆலோசனைப் படியும் அவிநாசி நகர கழக செயலாளர் P.ராமசாமி மற்றும் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் அவிநாசி நகரம் 15 வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் நகர கழக துணைச் செயலாளர் .எம். எஸ் .மூர்த்தி. அவிநாசி நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், பூபதிராஜ், குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த உதவியை அப்பகுதி மக்கள் மகிச்சியுடம் பாராட்டி வருகிறார்கள்.