திருப்பூரிலிருந்து பீஹார் கிளம்பிய 1400 வட மாநில தொழிலாளர்கள்; நேரில் சென்று வழியனுப்பி வைத்த கலெக்டர் க.விஜயகார்த்திகேயன்

 



திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று (12.05.2020), திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மேலும் அவர் பேசுகையில்:-


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பிலும் எவ்வித தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்தது.



தொழிலாளர்கள் தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விருப்பம் தெரிவித்து சுமார் 10,400 நபர்கள் பதிவு செய்திருந்தனர்.


மேலும், தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி இவர்கள் அனைவரும் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, இவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதுடன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்களில் முதற்கட்டமாக கடந்த 10.05.2020 அன்று திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1140 நபர்கள் பீஹார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


சுமார் 720 நபர்கள் பேருந்துகளிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


மேலும், இன்று (12.05.2020) 1400 நபர்கள் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து பீஹார் மாநிலத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.



ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக சென்னை செல்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் சுமார் 114 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோயமுத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 112 நபர்கள் ஏற்கனவே தங்களது வீடுகளுக்கு திரும்பினர் - கடைசியாக சிகிச்சை பெற்று வந்த 2 நபர்களும் பூரணகுணமடைந்து நேற்று (11.05.2020) தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.


இதனால் நமது மாவட்டத்தில் புதிய தொற்றுகள் ஏதுமில்லை. தற்போது தான் சிவப்பு நிற மண்டலத்திலிருந்து ஆரஞ்சு நிற மண்டலத்திற்கு சென்றுள்ளோம். விரைவில், பச்சை நிற மண்டலத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்.



நமது மாவட்டத்தில் சுமார் 32 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தம் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றது.


நோய்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இனி வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு, பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லும் போது குடைபிடித்துக்கொண்டு சமூக இடைவெளியினை முழுமையாக பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.


முன்னதாக, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கான மருத்துவ முகாமினையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, திருப்பூர் தவால் கலர் கம் சார்பில் ஊத்துக்குளி சாலை, மண்ணரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 200 மாணவ, மாணவியர்களின் பெற்றோருக்கு அத்தியாவசிய பொருட்களையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் பாபு, அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு