திருப்பூர்; கே.வி.ஆர்.நகரில் 1500 குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ.,அரிசி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கினார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 56வது வார்டு கே.வி.ஆர. நகர ஏ.டி. காலனி பொதுமக்களுக்கு கொரானா தொற்று நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ., சு. குணசேகரன் வழங்கினார். கொரானா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுரையின்பேரில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 56வது வார்டு கே.வி.ஆர்.நகர் பகுதியிலுள்ள ஏ.டி.காலனியில் வசிக்கும் 1500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வழங்கினார்



இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி, 56வது வார்டு கிளை செயலாளர் பொன். மருதாசலம் மற்றும் நிர்வாகிகள் ஆட்டோ கோவிந்தன், மருதப்பன், ராதாகிருஷ்ணன், சலவை மணி, மீசைமுத்து, டெய்லர் குருசாமி, பிரிண்டிங் நாகராஜ், பி.கே. பரமசிவம், செல்லம் நகர் சுப்ரமணி, கே.எஸ். பழனி, பாரப்பாளையம் பாலு, சக்தி, மேலூர் மணி கே.வி.ஆர்.நகர் பிரகாஷ், ஜீவா நகர் கமல்,  பழனிசாமி, சரஸ்வதி,  செல்வம், கறிக்கடை ராமசாமி, பிரிண்டிங் சரவணன், நாகமணி, அண்ணாநகர் ஜெயராமன்,  ஸ்ரீரங்கன், சின்ராஜ், ரமேஷ், கே.ஆர்.ஆர்.தோட்டம் முத்து, கே.வி.ஆர்.நகர் பழனிசாமி,  சக்தி மற்றும் வேலம்பாளையம் கண்ணப்பன், ஆண்டவர் பழனிசாமி, தம்பி சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு