மே 17க்கு பிறகு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக இதுவரை 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கான சம்பளம் 450 கோடி நிதி தேவைபடுகிறது. வருவாய் பற்றாக்குறையால்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஓரளவுக்கு ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மதுபானங்கள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இந் நிலையில் ஊரடங்கின் போது, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய மே 17க்கு பின்னர் ஊரடங்கு முடிந்தவுடன் பேருந்து கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.