திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் கடந்த 6 வது வாரமாக உடுமலை ருத்ரப்பா நகர் பகுதியில் பொது மக்களுக்கு கபாசுர குடிநீர் வழங்கினார். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடை பிடிக்க வலியுறுத்தி அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் சுப்பிரமணி ஸ்டாலின். வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஆனந்தன், பாலகிருஷ்ணன், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர். சைக்கிள் மூலம் வீடு வீடாக சென்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.