கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட ரெயில் சேவை இரண்டு மாதங்களுக்குப் பிறகு துவங்குகியது. ரயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.
இந்த சிறப்பு ரயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள 15 ரயில் சேவைகள் அடுத்தமாதம் முதல் 200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சேவையில் ஏசி வசதி இல்லாத ரயில்களும் அடங்கும்.
நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்ட ஒரு டுவீட்டில், ரெயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களைத் தவிர, "ஜூன் 1 முதல் தினமும் 200 கூடுதல் கால அட்டவணை ரெயில்களை இயக்கும், இது ஏர் கண்டிஷனிங் அல்லாத இரண்டாம் வகுப்பு ரயில்களாக இருக்கும், மேலும் இந்த ரயில்களின் முன்பதிவு ஆன்லைனில் கிடைக்கும்" என கூறப்பட்டு உள்ளது.
ரயில்கள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மே 22 முதல் காத்திருப்பு பட்டியலிடப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்குவதாக ரெயில்வே கடந்த வாரம் சுட்டிக்காட்டியது.