திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 21 வார்டுகளிலும் 21,000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தெற்கு தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் திருப்பூர் நகரில் பனியன் கம்பெனியில் பணிபுரியும் வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் குறைகளை போக்கும் வகையில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட மாநகராட்சி, 45வது வார்டு பகுதி, ஜம்மனையில் 500குடும்பங்களுக்கு அரிசிப்பைகளை எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 3வது மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், மயூரிநாதன், கண்ணபிரான், தம்பி சண்முகசுந்தரம், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், ஜம்மனை பழனிசாமி, கமலக்கண்ணன், முருகன், லோகு, துரை, லீலா, வசந்தா, பாயம்மா, மகாலட்சுமி, பரமேஸ்வரன், சத்யப்பிரியா, அன்பு, ராகுல் ரமேஷ், தேவ் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட, திருப்பூர் மாநகராட்சி 56 வது வார்டு கோபால் நகர் பகுதி கவுதம் டெக்ஸ் அருகில் 500 பேருக்கு அரிசி, மளிகைத்தொகுப்பு ஆகியவற்றை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ, சு.குணசேகரன் வழங்கினார். மாநகராட்சி நிலைக்குழு முன்னால் தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாளருமான முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கவுதம் டெக்ஸ் ஈஸ்வரமூர்த்தி, சலவை மணி, பொன் மருது, முத்து,குருசாமி, பி.கே. பரமசிவம், செல்வம், பழனி, சுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.