பல்லடம்; 3வது கட்டமாக 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,!!
 

பல்லடம் தொகுதியில், கொரானா வைரஸ் தொற்றால் கடந்த 40 நாட்களக்கும் மேலாக வேலை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மற்றும் கூலி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 10,000 குடும்பங்களின் துயர்போக்கிட மூன்றாவது கட்டமாக எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடரஜன், தனது சொந்த நிதியிலிருந்து அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரின் சொந்த நிதியின் மூலம் மானூர், கரியம்பாளையம் எம்ஜிஆர் நகர், கெங்கநாய்க்கன் பாளையம், நீலிகாடு, வட்டக் காட்டுப்புதூர், மாணிக்கபுரம், ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு  எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் தூய்மைப் பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மயூரிப் பிரியா, நடராஜன், பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கல்பனா, வேலுச்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க.ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்


பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு பகுதி மகளிர் அணி செல்வி ஏற்பாட்டின் பேரில் அண்ணா நகர், பகுதியில் வசிக்கும் 200 ஏழை, எளிய குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ..நடராஜன் அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.இதில் நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், உழவர் பணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, தங்கவேல், ரவி, பருவாய் மாணிக்கம், ரமேஷ், வனஜா,மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து  கலந்து கொண்டனர்.


பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை நகராட்சி கொரானா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்க எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலையில் ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், சங்க நிர்வாகிகளான எஸ்.கே.டி.டெக்ஸ்டைல்ஸ் நாச்சிமுத்து, லட்சுமணா சைசிங் சாமிநாதன், எவரெஸ்ட் ஏ.சின்னச்சாமி, மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், பனப்பாளையம் லட்சுமணன், ஆகியோர் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி கரைப்புதூர் கிராம பகுதியில் தமிழக அரசின் சார்பில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் குடிநீர், முக கவசங்களை எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்.இந்நிகழ்வில் ஸ்ரீ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜன், அ.தி.மு.க.ஊராட்சி  செயலாளர் பி.விசுவநாதன், தேவராஜ், ஏ.ஆர்.எஸ்., ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துசாமி, ராஜா, அவரப்பாளையம் தங்கராஜ், பாலு, மூர்த்தி என்.எஸ்.கே.  நகர் சரவணன் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பகுதிகளில் கொரானா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு தேவைக்கேற்ப இருப்பு இருப்பதை எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உடனிருந்தனர்

பல்லடம் நகராட்சி 6,வது வார்டு  பகுதிகளுக்கு பொன்னி மருத்துவமனை சார்பாக பச்சாபாளையம் பகுதியில் வசிக்கும் 1000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன்  அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், முக கவசங்களை வழங்கினார். இந்நிகழ்வில்  நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர், பொன்னி மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், உழவர் பணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, தமிழ்நாடு பழனிச்சாமி, தங்கவேல், வைஸ் பழனிசாமி, தர்மராஜன், ரவி, வெண்ணை சுப்பிரமணியம், அண்ணாமலை, சிவகாமி பழனிசாமி, டீக்கடை மயில்சாமி மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image