திருப்பூரில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்.நகரில் ஒரு டாஸ்மாக் கடையை திறந்ததும், அங்கு வந்த மதுபிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக பிச்சம்பாளையம் புதுரை சேர்ந்த செல்லவேல் வயது 55, முருகானந்தபுரத்தை சேர்ந்த சரவணன் வயது 40, கணக்கம்பாளையம் பிரிவை சேர்ந்த அருண் வயது 29 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பும் சிலர் பட்டாசு வெடித்தனர். அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது பிறந்தநாளுக்காக பட்டாசு வெடித்தோம் என்று கூறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.