கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. அதன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு ஆரோக்கியம் திட்டத்தை உருவாக்கி ஆயுர்வேதா, யோகா நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவத்தை பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்ட சேவாபாரதி அமைப்பானது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கில் சேவைப் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர்கள், அனைத்து அமைப்புகளின் தன்னார்வலர்கள், பொது விநியோகத்திட்ட பணியாளர்கள், திருப்பூர் பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு சேவாபாரதி மருத்துவக்குழுவின் சார்பாக மருத்துவ பரிசோதனை முகாம்களை நாள்தோறும் ஒவ்வொரு பகுதிவாரியாக நடத்தி வருகின்றது.
இன்று (01.05.2020 - வெள்ளிக்கிழமை) திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை ஆயுர்வேதா மருத்துவர் கவிதா தலைமையில் சேவாபாரதி தன்னார்வலர்களுடன் கொரோனா நோய்த் தொற்று பாதித்த பகுதிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை நேரிடையாக வழங்கினார்கள். தகுந்த பாதுகாப்புக் கவசங்களுடன், சமுதாய விலகலைக் கடைப்பிடித்து மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டன.
15 வேலம்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட சிங்காரவேலன் நகர், குமரானந்தபுரம், G.K கார்டன், சாரதா நகர், திருப்பூர் மாநகர் பகுதியான பழனியம்மாள் பள்ளி வீதி ஆகிய இடங்களிலும், கொரோனா தொற்று குணமடைந்தவர்கள் என மொத்தம் சுமார் 400 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டன.