திருப்பூர்; 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி சாதனை படைத்த எம்.எஸ்.எம்.ஆனந்தன்!!!




திருப்பூரில், ஒரே நாளில் 40 வாகனங்களில் ரூ.80 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண பொருட்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அனுப்பி வைத்தனர்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.கழகம் சார்பில், கொரொனா ஊரடங்கால், வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  வடக்கு தொகுதியில் உள்ள மாநகராட்சியில் உள்ள 40வார்டுகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு, நிவாரண உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. 


இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் 12 ஆயிரம்  குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பை, பருப்பு, எண்ணெய் உள்பட 16 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு என ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திரட்டப்பட்டன. 

இந்த நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான நிகழ்ச்சி, ஜீவா நகர் கூட்ட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் 40 வாகனங்களில் 12 ஆயிரம் குடுபங்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.


இந்த பொருட்கள் அந்தந்த கிளை நிர்வாகிகள் மூலம் பிரித்து வார்டுகளில் உள்ள ஏழை, எளியோருக்கு வழங்கப்படுகின்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், கணேஷ்,  கழக நிர்வாகிகள் வி.கே.பி.மணி, கலைமகள் கோபால்சாமி பழனிவேல், ஹரிஹரசுதன், நீதிராஜன் முன்னாள் கவுன்சிலர்கள் ஈஸ்வரன், பாரத் டையிங் முருகநாதன், திலகர் நகர் சுப்பு, காலனி செல்வராஜ், தங்கவேல் அர்ச்சுணன், ஏ.டி.காலனி பழனிசாமி, கனக்ராஜ், ரங்கசாமி, எஸ்.எம்.எஸ்.துரை, பெரியார் காலனி ஈஸ்வரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜூ, கோட்டா பாலு, ரேவதி குமார், மாணிக்கம், ராஜமாணிக்கம், ராஜகோபால், ஜீவா காலனி கந்தசாமி, வேலுசாமி, காட்டன் குமார்,  பாசறை லோகு, ஷாஜகான், பரமராஜன், அருண் உள்பட பலர் பங்கேற்றனர். 




 


 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு