திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த சமயத்தில் செவித்திறன், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிபவர்கள் பேசும்பொழுது செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதடசைவு வாயிலாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கு பிரத்தியோமாக வடிசமைக்கப்பட்ட உதடு மறைக்காத சிறப்பு முகக்கவசத்தை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார்.