பல்லடம்; கொரானா நிவாரணம் வழங்குவதில் விண்ணைத் தொட்ட தொகுதி!!

பல்லடம் தொகுதியில் விண்ணை தொட்ட நிவாரண பொருள் உதவி!தொகுதி மக்கள் மனதில் எம்.எல்.ஏதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் வழிகாட்டுதலில்படி, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் கொரானா ஊரடங்கு கால நிவாரண பொருள் உதவியாக, புலம் பெயர்ந்த வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களுக்கு இதுவரை ஒரு லடசம் குடும்பங்களுக்கும் மேல் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் தனது சொந்த நிதியில் இருந்து நேரடி பார்வையில் வழங்கி உள்ளார்.



மேலும், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் வைஸ் பழனிசாமி, ஏற்பாட்டின் பேரில் மேற்கு பல்லடம் பகுதியில் வசிக்கும் 600 ஏழை, எளிய குடும்பங்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் வைஸ் பழனிசாமி ஆகியோர் அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினர். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, தங்கவேல், பானு பழனிசாமி, குங்குமம் சிவக்குமார், பாரதி செல்வராஜ், தமிழ்நாடு பழனிசாமி, சரலை விக்னேஷ், லட்சுமணன், வெண்ணை சுப்பிரமணியம், யவன கதிரவன், ரவி, கயாஸ், சதீஷ், கந்தசாமி, பருவாய் மாணிக்கம், செல்வி, வனஜா, மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்.



திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்,  இடுவாய் ஊராட்சியில் கொரானா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளான ஆட்டையம்பாளையம், ராஜகணபதி நகர், ஜெ.ஜெ.நகர், மாருதி நகர்,ஆகிய  பகுதிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், கிராம பகுதிகளில் வசிக்கும் 1300 ஏழை எளிய குடும்பங்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோர் அரிசி உள்ளிட்ட மளிகை மற்றும் காய்கறி தொகுப்புக்கள்,   முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பியூலா, பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் எ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் சென்னியப்பன்,  முத்துக்குமாரசாமி, மீனவர் அணி பழனியப்பன், ஹரிகரசுதன், ஷாஜகான், செல்வராஜ், பரமசிவம், ஜே.ஜே மணி, லோகு, மகளிர் அணி லதா, சேகர், கணேசன், மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்



பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூர் ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக பூமலூர் ஊராட்சி கழகத்தின் சார்பாக நடு வேலம்பாளையம், சின்னியம்பாளையம் ஆகிய கிராம பகுதியில் உள்ள 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு .கரைப்புதூர் ஏ.நடராஜன் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.இதில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி கழக செயலாளர் என்.கே.பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நடராஜன், சீனிவாசன், தங்கராஜ், முருகானந்தம், ஆனந்தன், மகளிர் அணி குட்டி, சிவகாமி, பழனியம்மாள், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.                                      பல்லடம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இச்சிபட்டி அ.தி.மு.க.,ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி ஏற்பாட்டின் பேரில் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள 3000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரைப்புதூர் ஏ.நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் சுவாமிநாதன், கார்த்தி, சென்னியப்பன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், பருவாய் மாணிக்கம், ஆறுமுகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படியாக தொகுதியில் முழுமையாக நிவாரண பொருள் உதவிகளை விண்ணை தொடுகிற வகையில் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையும் பெற்று, மற்ற தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு எடுத்து காட்டாகவும், தொகுதி மக்களின் சரித்திர நாயகனாகவும் விளங்கி வருகிறார். அவரது மக்கள் பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம். 


💐💐💐


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image