திருப்பூர் மாவட்டத்தின் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் இரா.இராஜ்குமார் அவர்கள், தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் ப.கனகராஜா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றார்கள்.
கொரோனா காலத்திலும் காணொலி மூலமாக செயற்க்குழுக் கூட்டம் நடத்தப்பட்ட ஓரே அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாகும்.
கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
1.ஆசிரியர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் பஞ்சப்படி நிறுத்தம் செய்துள்ள செயலையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் செயலை நிறுத்தி வைத்துள்ள செயலையும், சேமநல நிதிக்கான வட்டியை 0.8% குறைக்கப்பட்டுள்ள செயலை கண்டித்தும் கோரிக்கை மனுவாக தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைத்து வட்டாரக் கிளையின் மூலமாக அனுப்புவது,
2. கொரானாவினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தலா 5,000 நிதி வழங்க வேண்டும்,
3. அரசு மற்றும் அரசு உதவிப் பெரும் பள்ளிகள், மாணவ மாணவிகள் தங்கிப்பயிலும் விடுதிகளில் உள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை உடனே எடுத்து பொது விநியோக திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைப்பது,
4. இந்த கொரானா பாதிப்புக்குள்ளான நேரத்தில் பணியாற்றி மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை நண்பர்கள் மற்றும் தூய்மைப் பணியாற்றுபவர்களுக்கு முழுப் பாதுகாப்பு கவசம் வழங்குவதை உறுதிப்படுத்தியும், அவர்களுக்கு உரிய பாத்காப்பு மற்றும் உரிய மரியாதை செலுத்தவும் வேண்டுமெனவும்,
5. குடும்ப அட்டை உள்ள ஏழை எளிய மக்களுக்கு வட்டி இல்லாத கடனாக ரூபாய் 10,000 வழங்கிடவும் அக்கடனை மாதம் 1,000 வீதம் 10 தவனைகளில் பிடித்தம் செய்யும் விதமாக தமிழக அரசு வழங்கிட வேண்டுமெனவும்,
6. புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்க வேண்டுமென கூறிவரும் கல்வித்துறையின் உத்தரவு ஏழை எளிய மக்களுக்கு இந்த கொரானா நேரத்தில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத பெற்றோர்களுக்கு புதிய கைப்பேசி வழங்கிடவும் அதற்கான கட்டணத்தையும் வழங்கிட வேண்டுமாய் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் வேண்டுகோள் வைக்கிறது.
7. தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் கொரானா பரிசோதனையை முழுவீச்சில் செயல்பட வேண்டும் எனவும், மேலும் வெளி மாநிலத்தின் மூலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமாறும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
முடிவில் மாவட்டப் பொருளாளர் பா.ஜெயலட்சுமி நன்றியுரை வழங்கினார்.