குடை பிடிச்சா தான் குவாட்டர்; நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக 17.05.2020 வரை முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டிருப்பதால் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக்கடைகள் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக்கடைகள் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் வரும் 07.05.2020 முதல் மதுபானக்கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.  


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் [Containment zones) உள்ள மதுபானக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் 07.05.2020 முதல் திறக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.


1.மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.


2.ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்


3.மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.


4.மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.


5.அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.


6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.


7. சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபானக்கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படமாட்டாது.


8.மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு மதுபானக்கடை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும், பணியாற்றும் ஊழியர்கள் கண்டிபாக முகக்கவசம மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.


மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு மதுபானக்கடைகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது. மதுபானக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை. மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image