பல்லடம்; தொகுதி மக்களை குளிர வைத்த எம்.எல்.ஏ., மக்கள் மனம் திறந்து பாராட்டு!!

பல்லடம் தொகுதியில் மக்களின் தேவையை அறிந்து கொரானா நிவாரண பொருட்களை தினம், தினம், ஓடோடி சென்று வழங்கி வருகிறார் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜனை அனைவரும் பாராட்டுகின்றனர். 




கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதிலும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக இந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. இதனை தொடர்ந்து தமிழக முதலவர் எடப்பாடிகே.பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், பல்லடம் தொகுதிக்கு உட்பட மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ.கரைப்புதூர் ஏ.நடராஜன் தினம், தினம் கொரானா நிவாரணம் பொருட்களை வழங்கி வருகிறார்.கொரானா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 38வது நாளான


இன்று பொங்கலூர் ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில், அ.தி.மு.க.சார்பில், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி பைகளை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம் ஆனந்தன், எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.இதில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, பல்லடம் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி மன்ற துணை த்தலைவர் ராஜேஷ்குமார் சிவசாமி, மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் பொன்னுசாமி, வீரபாண்டி பகுதி கழக செயலாளர் பண்ணையார் பழனிசாமி, விவசாய பிரிவு தலைவர் சிதம்பரம், இளைஞர் அணி துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் மற்றும் சுவுன்சிலர்கள் என்.எஸ்.கே.நகர் சரவணன், பாசறை ஷாஜகான், அருண்குமார் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.  





முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட பகுதிகளான பொன்னாபுரம், சிட்கோ, மாணிக்கபுரம், ஹவுசிங் யூனிட், உள்ளிட்ட 12 வார்டுகளை சேர்ந்த 1300 ஏழை, எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை, தொப்பி, சீருடை ஆகியவற்றை ஊராட்சி மன்ற செயலாளர் மயூரி பிரியா நடராஜ் தலைமையில், எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வேலுசாமி, மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாச்சிபாளையம் ஊராட்சி மணியம்பாளையத்தில் ஊராட்சி கழக செயலாளர் அப்புசாமி தலைமையில் 1500 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ எடையுள்ள அரிசி பைகளை எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்களின் தேவைகளை அறிந்து தினம், ஊராட்சி பகுதிகளுக்கு விரைந்து சென்று தினம் நிவாரண உதவிகளை வழங்கி வரும் எம்.எல்.ஏ,வை தொகுதி மக்கள் மற்றுமின்றி தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள், அரசுத்துறை அதிகளரிகள் என அனைவரும் பாராட்டுகின்றனர்.






Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு