திருப்பூரில், 1000 ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்.
கொரானா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தின்கோரிக்கையைஏற்றுக்கொண்டு அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களை சேர்ந்த 600 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, உப்பு, மஞ்சள்தூள், துவரம்பருப்பு, எண்ணை, கடுகு, சீரகம், கொள்ளு, கோதுமைமாவு,
கடலைபருப்பு, வெந்தயம், ராகிமாவு, கொண்டை கடலை, மிளகாய்த்தூள், சேமியா, குருமிளகு உள்ளிட்ட பொருட்களை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.கண்ணப்பன், பகுதி செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, எஸ்பி.என்.பழனிசாமி, அட்லஸ் சி.லோகநாதன், தம்பி மனோகரன், பி.கே.எஸ்.சடையப்பன், சி.எஸ்.கண்ணபிரான்,தென்னம்பாளையம் கணேஷ், ஆண்டவர் பழனிசாமி, தம்பி சண்முகசுந்தரம் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சுதா சுப்பிரமணியம், முகமது யூனூஸ், பன்னீர்செல்வம், ஆறுமுகம், பாலுசாமி, நடராஜ், வேலுமணி, முத்துக்குமார், சதீஷ், அம்மன் ரங்கசாமி, மோகனசுந்தரம், ஜெயசீலன், சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து திருப்பூர் மாவட்ட இசைக் கலைஞர்களின் 50 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்புகளையும் எம்.எல்.ஏ., வழங்கினார். அப்போது ஒரு இசைக் கலைஞரின் செல்போனில் இருந்து
அந்த "வானத்தை போல மனம் படைத்த மன்னவனே"! என்ற பாடலின் ரிங்டோன் ஒலித்தது.