புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதில் இரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாள்முதல், பயணிகள் இரயில் சேவைகளை மட்டுமே இரயில்வே ரத்து செய்தது. சரக்கு இரயில்கள் மற்றும் சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் இரயில்கள் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.இந்த சரக்கு இரயில்கள் மற்றும் சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
தற்போது, மாநில அரசுகளுடன் இணைந்து தெற்கு இரயில்வே, பிற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல "ஷ்ரமிக்" சிறப்பு இரயில்களை இயக்கி வருகிறது. தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில்கள் மூலம் அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது.தெற்கு இரயில்வேயின் சேலம் கோட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் இரயில் தண்டவாளங்களில் அத்துமீறல் மற்றும் நடந்து செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது. இரயில் தடங்களை கடப்பது ஆபத்தானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இரயில்களின் வேகம் யூகிப்பதை விட அதி வேகமானவை. எனவே, இரயில்பாதை உபயோகிப்போர் விழிப்புடனும் கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.