திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரானா தொற்று நிவாரண உதவிகளை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். நெட்டிங் மெடிக்கல் அறக்கட்டளை சார்பில் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருப்பூரில், பணிக்குச் செல்லாத முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாய குடும்பங்கள், தினக்கூலி மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் காந்திநகரில் உள்ள என். எம். சி.டி.,சேவை நிறுவனத்தின் அலுவலத்தில் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிறுவனத்தின் திட்ட மேலாளர் செல்வதேவன் வரவேற்றார்.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சு.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யனாளிகளுக்கு 1800 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்க பகுதிஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மற்றும்பங்கஜாசன், வேலம்பாளையம் பகுதி இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த உதவிகளை என் எம் சி டி சேவை நிறுவனம், ராயல் என்ஃபீல்ட் மற்றும் ஈச்சர் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.திருப்பூர் சிட்டி அரிமா சங்கம் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உதவியாக இருந்தது.
மேலும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலைப்பேட்டை, அவிநாசி உள்ளிட்ட 7 தாலுக்காக்களில் இதுவரை 4200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் என்.எம்.சி.டி.சேவை நிறுவன பொறுப்பாளர் ஜெனிதா நன்றி கூறினார்.
மேலும் அனுப்பர்பாளையம் பகுதியிலிருந்து சுமார் 100 நலிவடைந்த தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவிற்காக சிரமப்பட்டு வருவதாக சு.குணசேகரன் எம்.எல்.ஏ.,விற்கு தொலைபேசி வாயிலாக வந்த தகவல்களை தொடர்ந்து உடனடியாக 100 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை சொந்த செலவில் அனுப்பி வைத்துதார்.அந்த நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினைவெ.அ.கண்ணப்பன் அனைவருக்கும் வழங்கினார்