சேலம், திருப்பூர், கோவை ஆகிய இரயில் நிலையங்களில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில், மும்பை, டெல்லி ஆகிய ஊர்களுக்கு வரும் 15ந் தேதி வரை பார்சல் அனுப்பலாம் என சேலம் இரயில்வே கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி செய்தியில் கூறியிப்பதாவது:-சென்னை எக்மோரிலிருந்து லிருந்து (வண்டி எண் 00653) கேரள மாநிலம் சொரனூர் வரையும், சொரனூரிலிருந்து (வண்டி எண் 00654) சென்னை எக்மோர் வரையும் இயக்கபடவுள்ளது (கொள்ளளவு-31 டன்). வண்டி நிற்கும் இடங்களான சென்னை, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துகுளி, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர் (இருவழியிலும்). வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறோம். தாங்கள் சரக்குகளை மேற்கண்ட ஊர்களுக்கு அனுப்பவிரும்பினால், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் இரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு கோயமுத்தூர்- 7012592712/9003956955, திருப்பூர்- 9543152339/9600956238, ஈரோடு- 9443990801/9600956231, சேலம்- 9443840720/9003956957 எண்களை தொடர்பு கொள்ளவும்.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை இரயில் நிலையங்களிலிருந்து பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, திருச்சூர், ஆல்வாய், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் இரயில் நிலையங்களுக்கும், மும்பை, டெல்லி, ஹெளரா போன்ற நகரங்களுக்கும் பார்சல்களை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ள வேண்டப்படுகிறார்கள். மேற்கண்ட வாறு அவர் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
இரயிலில், சென்னை, சொர்னூர், திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய ஊர்களுக்கு பார்சல் அனுப்பும் வசதி! கோட்ட வணிக மேலாளர் தகவல்.