திருப்பூர்: ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், உயர்மட்ட 'எஸ்கலேட்டர்' (நகரும் படிக்கட்டுகள்) பாலம் அமைக்க, 1.50 கோடி ரூபாயை தெற்கு ரயில்வே ஒதுக்கியது. கடந்தாண்டு மே மாதம் இதற்கான பணியை பொறியியல் பிரிவினர் துவக்கினர். டிச., இறுதியில் வலுவான, 32 துாண்களை நிலைநிறுத்தும் பணி ராட்சத கிரேன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ, 70 சதவீத பணி நிறைவு பெற்றதால், ஏப்., துவக்கத்தில் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால், பணிகள் நிறுத்தப்பட்டன.கடந்த ஆண்டு மே, 4ம் தேதி கட்டுமான பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள், கலெக்டரிடம் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டனர். வழக்கமான பணியாளர்களை கொண்டு பணிமேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தவரை பணியில் ஈடுபடுத்த கூடாது. உடல் நலக்குறைவானவரை பணிக்கு அழைக்க கூடாது' என்ற நிபந்தனைகளோடு, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதனால், எஸ்கலேட்டர் பாலத்தின் மேல், மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி துவக்கம்; நிபந்தனைகளோடு, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்