கொரோனா காலத்துல கடன் வசூலிக்க கறார் பண்ணா ’அவ்ளோ’தான்...கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், நிறு நிதி வங்கிகள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகள், உட்பட அனைத்து வணிக வங்கிகள்/நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) (வீட்டு வசதி நிறுவனங்கள் உள்பட அைைனத்து கடன் வழங்கும் நிறுவனங்கள்) வேளாண் கடன்கள், சில்லறை மற்றும் பயிர் கடன்கள் உள்பட அனைத்து விதமான கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31-ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


.


COVID-19 கொரானா வைரஸ் தொற்று நோய் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 27.03.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையில்(Notification Ref. NO.DOR.NO.BP.BC.47/21.04.048/2019-20) கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் சிறு நிதி வங்கிகள் மற்றும் உள்ளுர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள்/நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) (வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்கள்) வழங்கியுள்ள வேளாண் கடன்கள், சில்லறை மற்றும் பயிர் கடன்கள் உட்பட அனைத்து விதமான கடன்களையும் மார்ச் 01, 2020 மற்றும் மே 31, 2020-க்கு இடையில் வரவிருக்கும் அனைத்து கடன் மீள செலுத்தும் தவணைகளை தள்ளிவைத்து வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.


இக்கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தொகையின் மீது வட்டி கணக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக கடன்தாரர்கள் தவணை தொகையை செலுத்திட வங்கிகள்/ நிறுவனங்கள் சார்பில் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வரப்பெறுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள்/ நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு