திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என புதிய நேரக்கட்டுப்பாட்டை காங்கயம் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்திலும், மாஸ் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.