திருப்பூர்: 9 மாத குழந்தை, தந்தைக்கு கொரோனா





திருப்பூரில் கொரோனா நோய்த் தொற்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

கடந்த வாரம் வரை தொடர்ச்சியாக 41 நாட்கள் புதிய தொற்று ஏதும் இல்லாமல் இருந்தது.


 

இதனால் திருப்பூர் பொது மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். 

இருந்தபோதிலும் திருப்பூரில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மாஸ்க் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயனால் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பலரும் அதைப் பின்பற்றவில்லை. 

 

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருப்பூரில் ஓரிரு தொற்றுக்கள் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. 

அவ்வாறு வரும் நோயாளர்கள் பெரும்பாலும் வெளியூரிலிருந்து வருபவர்கள் ஆகவே இருக்கிறார்கள். 

 

அவர்களை மாவட்ட எல்லைகளில், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தடுத்து பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணியை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 

 

இந்த நிலையில் இன்று திருப்பூர் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து திண்டுக்கல் வந்தபோது திண்டுக்கல்லில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் 35 வயது ஆண் மற்றும் அவரது 9  ஒன்பது மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அவரது மனைவிக்கான பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் தெரியவரும் தெரியவரும்.

தந்தை மற்றும் குழந்தைக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு பேரின் எண்ணிக்கையும் நோய்த்தொற்று உறுதியான திண்டுக்கல் மாவட்டம் அல்லது சென்னை மாவட்ட கணக்கில் சேர்க்கப்படும் என தெரிகிறது.

இப்போதைக்கு திருப்பூரில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மற்றபடி அனைத்து நோய்த்தொற்றை அவர்களும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். 

இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றுக்கு அழகிய நபர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக உள்ளது.

நோய்த்தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டுமென திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 



 



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image