கொரோனா காலத்தில் மைக்ரோ பைனான்ஸ் வசூலை தடுக்கக் கோரி எருமை மாட்டிடம் மனு

திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிற்க்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன்கள் வழங்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களால் கடன் தொகை செலுத்த முடியாமல் உள்ளனர்.


இதற்காக மத்திய அரசு ஆறு மாத காலம் கடன் தொகை தவணை கட்டுவதற்கு அவகாசம் அளித்துள்ளது. ஆனால்  அவகாசத்தை கருத்தில் கொள்ளாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


கடன் வாங்கிய பெண்களின் வீட்டிற்க்கு வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாகஅனர்.  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதோடு, கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவதாகவும்பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.


மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரி, மூன்று மாதங்களில் 20 முறைக்கு மேல் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது  நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இறுதியில்  எருமை மாட்டிற்க்கு மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மனுவை பறித்து சென்றனர். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image