திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகே உள்ள தேவணம்பாளையம் கிரமத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக பொது நூலகம் மற்றும் முதலுதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து அமைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் கருப்புசாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கலூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.