சேவா பாரதி அமைப்பின் மீது களங்கப்படுத்தும் நோக்கத்தில் சமுதாயத்தில் பொய்க் கருத்துக்களை பரப்பி விடும் தேசவிரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சேவாபாரதி சார்பில் புகார் அளித்தனர்.
இதில் தென் தமிழ்நாடு சேவா பிரமுக் பத்மகுமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட சேவா பாரதியின் தலைவர் விஜயகுமார், சேவாபாரதி பொதுச்செயலாளர் மோகன் குமார், வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.