துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் மருத்துவர்களுக்கான முழு கவச ஆடையை நமது திருப்பூரில் உள்ள கின்ஸி என்ற தனியார் பின்னலாடை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறத. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வீரர்களாக இருப்பவர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள். இவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பிபிஇ கிட் எனப்படும் முழு கவச ஆடைகள் வழங்கப்படுகிறது இந்த ஆடைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதை அணிபவர்களுக்கு காற்று உட்புகாமல் மிகவும் அசௌகரியமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழல் உருவாகிறது.
இதனை போக்கும் விதமாக திருப்பூரில் உள்ள கின்ஸி என்ற தனியார் பின்னலாடை நிறுவனம் பருத்தி (காட்டன்) துணியில் முழு கவச ஆடைகளை தயாரித்துள்ளது. இந்த முழு கவச ஆடைகளை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். மேலும் பருத்தி இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சாதாரண துணி வகையைச் சேர்ந்த கவச உடை என்பதால் இதை அணியும் பொழுது அதிக அளவில் வியர்வை வருவதில்லை. காற்றோட்டமான ஆடையாகவும் முழு பாதுகாப்பு ஆடையாகவும் விளங்கும் என அந்நிறுவனத்தின் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆடையை துணியாக இருக்கும்போது ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ப்ரஷ் எனப்படும் வைரஸ் கொல்லி மூலம் வைரஸ் கொல்லி துணியாக மாற்றுகின்றனர் அதன் பிறகு இதனை முழு கவச உடைகள் ஆக தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர் இந்த ஆடைக்கு தற்பொழுது உலக அரங்கில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.