டிக் டாக்கை மிஞ்சிய சில்5... இரண்டு வாரத்தில் பல ஆயிரம் பேர் பதிவிறக்கம்... திருப்பூர் நண்பர்களின் சாதனை

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

தற்போது இந்தியா சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக நம் மக்களிடம் சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல்போன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.


இதனால் அந்த செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாமால் போனது . டிக் டாக் செயலி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள்  பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக பல செயலிகள் இருந்தும் அவை இந்த அளவிற்கு யாரும் விரும்பவில்லை.


தற்பொழுது இந்தியாவில் டிக் டாக் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல செயலிகளும் அந்த இடத்தை பிடிக்க போட்டி போட்டு வரும் நிலையில் நமது திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து டிக் டாக் டிக் டாக் செயலியை போல் சில்5 chill5 என்ற  செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார்(26), சௌந்தரகுமார் (28), சந்தீப் (25), கோகுல் (25), வெங்கடேஷ் (25) என்ற 5 பேரும் இணைந்துதான் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர்.


பார்ப்பதற்கு டிக் டாக் போலவே காட்சி தரும் இந்த செயலி டிக் டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்கள் கொண்டுள்ளது. தமிழக இளைஞர்கள் வடிவமைத்து என்பதால் இதனை மெருகேற்ற பயனாளர்கள் கொடுக்கும் புகார்கள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில் தற்போது வரை பல ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த செயலிக்கான சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது எனவே தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனை பயன்படுத்துபவர்கள் இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாக தெரிவித்தனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு