திருப்பூர், வெள்ளகோவில் பகுதியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில், கொரோனா நிவாரணமாக 650 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை அந்த கட்சியின் பொது செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார். மகளிரணி ஒன்றிய தலைவர் தனலட்சுமி, மகளீரணி நகர தலைவர் சித்ரா, செயலாளர் சிவரஞ்சனி, பொருளாளர் கலைவாணி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.