திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மதியம் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து ஓடினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறை அலுவலர் லட்சுமணன் (பொறுப்பு) தலைமையில் சக வீரர்கள் சிறுகுடி சென்று அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதுங்கி இருந்த 6.அடி நீளமுள்ள சாரைப்பாம்பை
உயிருடன் பிடித்து நத்தம் வனத்துறையினரிடம் உயிருடன் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த சாரைப்பாம்பை வனத்துறையினர் கரந்தமலை வனபகுதியில் விட்டனர்.