திருப்பூர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாபாளையம் பகுதியில் ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டில் 2 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தன்னிறைவு திட்டத்தின் பெரும் பங்களிப்பை கொடுத்து உதவிய எவரெடி மணி, மாவட்ட கவுன்சிலர் எம்.சாமிநாதன், ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, பட்டம் பாளையம் சொசைட்டி தலைவர் எஸ் எம் பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, பாசறை சந்திரசேகர், ஊராட்சி மன்ற து.தலைவர் ராஜாமணி கந்தசாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், சொசைட்டி தலைவர்கள் கிட்டுசாமி, நடராஜ், ஏசி ரங்கசாமி, வார்டு உறுப்பினர்கள் முருகேஷ் குமார், ராசப்பன், சரவணன், நந்தினி யுவராஜ், ஜெயமணி, முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார், நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், யுவராஜ், ரங்கசாமி, அருண், சந்திரசேகர்,மூர்த்தி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பியாபாளையம் பகுதியில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி.... எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்