பத்மஸ்ரீ. நானம்மாளின் நினைவாகவும், சர்வதேச யோகாதினத்தை ஒட்டியும் ஆன்லைன் சர்வதேச யோகா போட்டி வயது வாரியாக நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளிருந்து சுமார் 120 பேர்கலந்து கொண்டனர் .
இந்தபோட்டி 3 நிமிட காணொளிகாட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியின் முதலாம் வகுப்பை சார்ந்த கே.பிரிதிவ், 4 முதல் 6 வயது பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனையும் யோகா ஆசிரியர் நந்தகுமாரையும், தாளாளர் டாக்டர்.சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி மற்றும் இயக்குநர் சக்திநந்தன், துணை இயக்குநர் வைஷ்ணவிசக்திநந்தன், முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினார்.