மூன்றே நாட்களில் கொரோனாவில் இருந்து விடுதலை... காவலர்களுக்கு யோகா பயிற்சி
மகாயோகம் சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

 


 

டைம் ஸ்ரீ அசோசியேசன் ஆய்வுக் குழுமம் மூன்றே நாட்களில் கொரோனாவில் இருந்து விடுதலை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான யோகப் பயிற்சியை காவலர்களுக்கு இலவசமாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் G.வெங்கடேசன்  ஆலோசனைப்படி காரியாபட்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மகாயோகம் சார்பில் சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

 

இதில் கொரோனா வைரஸ் வேகமாகப் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தை குறைத்து இயற்கையாக இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய சிறப்பு யோகா பயிற்சி மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தக் கூடிய சிறப்பு கிரியா யோகா பயிற்சியும் அளித்துவருகிறது.

 


 

அதாவது சுவாசப் பாதையை சுத்தம் செய்து நுரையீரலின் கொள்ளவை அதிகப் படுத்தக் கூடிய பயிற்சி அளித்து காவல்துறை அதிகாரிகளை மேலும் புத்துணர்வு ஊட்டச் செய்கிறது.

 

காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் டைம் ஸ்ரீ அசோசியேசன் ஆய்வுக் குழுவும் என்ற அமைப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மனித ஆற்றல் மருத்துவம் யோகா மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பு மகாயோகா பயிற்சியை வழங்கி வருகிறது.

 

இந்த அமைப்பின் மருத்துவர்கள் குழு அலோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், எனர்ஜி மெடிசன் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பல மருத்துவ பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு தலைமை விஞ்ஞானியாகவும் மகா யோகத்தின் நிறுவனராகவும் இருக்கும் டாக்டர் கே.பி.குணாநிதி தலைமையில் அரிய கண்டுபிடிப்பான மனித ஆற்றல் மருத்துவம் என்ற புதிய மருத்துவ முறையின் அடிப்படையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

 


 

இதனால் தற்போது கொரோனா பாதித்தவர்களை மூன்று நாட்களில் குணமடையச் செய்யலாம், அவர்கள் வழக்கம் போல வீடு திரும்பலாம் என்ற ஆய்வில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

 

அதன்படி காரியாபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மகாயோகம் பயிற்சியாளர், சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், யோகா கின்னஸ் ரெக்கார்டர் டாக்டர்.செந்தில்குமார் தலைமையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

 

இதில் காவல் ஆய்வாளர் செல்வராஜ், சார்பு ஆய்வாளர் வினோத்குமார், அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார், சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் செந்தமிழ்செல்வன், முருகேஸ்வரன், உடற்கல்வி பயிற்சியாளர் கண்ணன், மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image